சிங்கப்பூரில் கனமழை – தோ பாயோவில் மொத்தம் 100மிமீ மழை பதிவு

MSS/Zheng Jiaxin

சிங்கப்பூரில் தீவு முழுவதும் இன்று (ஆக. 30) ​​காலை இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.

நள்ளிரவு முதல் காலை 11 மணி வரை வெளுத்து வாங்கிய மழையில், தோ பாயோவில் மட்டும் மொத்தம் 100மிமீ மழை பதிவாகியுள்ளது.

சிங்கப்பூரில் வெளுத்து வாங்கிய கனமழை – பல இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

இன்று முன்னதாக, ஹௌகாங் அவென்யூ 8 மற்றும் பொங்கோல் வழி ஸ்லிப் சாலையில் திடீர் வெள்ளம் பதிவாகியுள்ளதாக PUB தெரிவித்தது.

பின்னர் வெள்ளம் குறைந்துவிட்டதாகவும் PUB தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இந்த மழையின் காரணமாக குளிர்ச்சியான வானிலை சிங்கப்பூர் முழுவதும் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலை 10:42 மணி நிலவரப்படி, தீவு முழுவதும் 23°C முதல் 24°C வரை வெப்பநிலை பதிவாகியுள்ளதாக சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் (MSS) தெரிவித்துள்ளது.

மேலும், காலை 8:17 மணி நிலவரப்படி, பாசிர் பஞ்சாங்கில் மணிக்கு 31.5 கிமீ வேகத்தில் காற்று பதிவாகியுள்ளது.

அதேபோல, காலை 6:17 மணிக்கு பாசிர் பஞ்சாங்கில் குறைந்தபட்சம் 21.8°C காற்றும் பதிவாகியுள்ளது.

“அனைத்து குறைந்த ஊதிய ஊழியர்களும் அதிக வருமானத்தை எதிர்பார்க்கலாம்”