சிங்கப்பூரில் வெளுத்து வாங்கிய கனமழை – பல இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

PUB/ Facebook

சிங்கப்பூர் முழுவதும் இன்று (ஆக. 30) ​​காலை கனமழை வெளுத்து வாங்கியது. இதனை தொடர்ந்து, தேசிய நீர் அமைப்பான – PUB பல இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

தெம்பனீஸ் விரைவுச் சாலையில் ஸ்லிப் சாலை – பொங்கோல் வழியை வாகன ஓட்டிகள் தவிர்க்குமாறு PUB அறிவுறுத்தியது. சாலையின் மூன்று பாதைகளில் ஒன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.

“அனைத்து குறைந்த ஊதிய ஊழியர்களும் அதிக வருமானத்தை எதிர்பார்க்கலாம்”

மேலும், ஹௌகாங் அவென்யூ 8ல் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது, அங்குள்ள இரண்டு பாதைகளில் ஒன்று வெள்ளத்தால் பாதித்துள்ளதாக PUB கூறியுள்ளது.

காலை 11 மணி நிலவரப்படி, சிங்கப்பூர் முழுவதும் குறைந்தது 10 இடங்களுக்கு, 30க்கும் மேற்பட்ட வெள்ள எச்சரிக்கைகளை PUB வழங்கியுள்ளது.

எச்சரிக்கை செய்யப்பட்ட இடங்கள்:

  • சைம் டார்பி நிலையம்
  • பேலஸ்டியர் சாலை மற்றும் தாம்சன் சாலை
  • அப்பர் பயா லெபார் சாலை
  • லோரோங் புவாங்காக் (Lorong Buangkok)
  • MacPhersonஇல் ஹேப்பி அவென்யூ நார்த்
  • MacPherson சாலை
  • யியோ சூ காங் சாலை (Yio Chu Kang)
  • பொடோங் பாசிரில் உள்ள புவாய் ஹீ அவென்யூ மற்றும் சியாக் கியூ அவென்யூ
  • போத்தாங் பாசிரில் உள்ள சியாங் குவாங் அவென்யூ (Siang Kuang)
  • சோவா காங் அவென்யூ 1 மற்றும் டெக் வை லேன்

இந்தியப் பெருங்கடலில் வானிலை தாக்கம்… சிங்கப்பூரில் அடுத்த 2 மாதங்களில் கனமழை பெய்யக்கூடும்