இந்தியப் பெருங்கடலில் வானிலை தாக்கம்… சிங்கப்பூரில் அடுத்த 2 மாதங்களில் கனமழை பெய்யக்கூடும்

Pic: Roslan RAHMAN/AFP

இந்தியப் பெருங்கடல் துருவம் (IOD) எனப்படும் வானிலை நிகழ்வின் தாக்கத்தால் சிங்கப்பூரில் அடுத்த இரண்டு மாதங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தாக்கத்தால், சிங்கப்பூர் உட்பட இந்தியப் பெருங்கடல் படுகையின் கிழக்கு முனையில் உள்ள நாடுகளில் வழக்கத்தை விட அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது சிங்கப்பூர்

IODன் இந்த எதிர்மறையான கட்டம் வரும் அக்டோபர் வரை நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதன் பிறகு படிப்படியாக பலவீனமடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என சிங்கப்பூர் வானிலை ஆய்வகத்தின் (MSS) செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இந்த வானிலை நிகழ்வு, இந்தியப் பெருங்கடலில் ஏற்படும் வளிமண்டல அழுத்தம் மற்றும் கடல் மேற்பரப்பு வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களுடன் தொடர்புடையது.

மலேசியாவுக்குள் நுழையும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு