இந்த நாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது சிங்கப்பூர்

நியூசிலாந்தில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை சிங்கப்பூர் அறிவித்துள்ளது.

கிருமித்தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், அவர்களுக்கான எல்லை நடவடிக்கைகளை சிங்கப்பூர் கடுமையாக்கியுள்ளது.

மலேசியாவுக்குள் நுழையும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு

சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்கு முன், கடந்த 21 நாட்களில் நியூசிலாந்திற்கு பயணம் மேற்கொண்ட சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் மற்றும் நீண்ட கால அனுமதி வைத்திருப்பவர்கள் ஏழு நாட்கள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை அவர்கள் வசிக்கும் இடத்தில் பூர்த்திசெய்ய வேண்டும்.

இந்த புதிய நடவடிக்கை வரும் திங்கள்கிழமை இரவு 11.59 மணி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகையின்போது, COVID-19 – PCR சோதனை மேற்கொள்ள வேண்டும், அதே போல் அவர்களின் தனிமை காலம் முடிவடைவதற்கு முன்பும் சோதனை மேற்கொள்ள வேண்டும்.

கூடுதலாக, சிங்கப்பூர் புறப்படுவதற்கு 21 நாட்களுக்கு முன்னர் நியூசிலாந்திற்கு பயணம் மேற்கொண்ட ஏர் டிராவல் பாஸ் (ATP) வைத்திருக்கும் குறுகிய கால பயணிகள் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் இருந்து வரும் பயணிகள் சிங்கப்பூர் வந்தவுடன் மேற்கொள்ளப்படும் சோதனையின்போது COVID-19 நெகடிவ் முடிவு வந்தால், தனிமை காலத்தை நிறைவேற்ற வேண்டியதில்லை என்றும் சுகாதார அமைச்சகம் (MOH) கூறியுள்ளது.

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 8 பேர் கைது