சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 8 பேர் கைது

illegally entry Singapore arrested
(Photo: SPF)

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக கடற்கரை வழியாக நீந்தி வந்த சந்தேகத்தின்பேரில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (ஆகஸ்ட் 27) நள்ளிரவு 2.30 மணியளவில், எட்டு பேர் துவாஸ் அருகே உள்ள படகுத் துறையில் தண்ணீரில் குதித்ததை கடலோர காவல்படையின் கண்காணிப்பு அமைப்பு கண்டறிந்தது.

சிங்கப்பூர் கடற்கரையை நோக்கி அந்த நபர்கள் நீந்தியதாக காவல்துறை செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

மேலும், அவர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, கடலோர காவல்படை சேர்ந்த அதிகாரிகள், ஜூரோங் காவல் பிரிவு உள்ளிட்ட அதிகாரிகள் உடனடியாக அனுப்பப்பட்டனர் என்று காவல்துறை தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில், 21 வயது முதல் 55 வயதுக்குட்பட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக நுழைந்ததாக இன்று அவர்கள் மீது குற்றம் சாட்டப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்காக ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை மற்றும் மூன்று பிரம்படிகளுக்கு குறையாது தண்டனை வழங்கப்படலாம்.