மலேசியாவுக்குள் நுழையும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு

(PHOTO: Dhany Osman / Yahoo News Singapore)

ஜோகூர் சர்வதேச நுழைவாயில் வழியாக மலேசியாவுக்குள் நுழையும் பயணிகளுக்கு புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அவர்கள் அங்கு வருவதற்கு குறைந்தது ஏழு நாட்களுக்கு முன்பாக, தங்கள் வீட்டிலோ அல்லது மற்ற இடங்களிலோ கட்டாய தனிமைப்படுத்தலுக்கு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவேண்டும்.

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 8 பேர் கைது

புறப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக பயணிகள் COVID-19 PCR சோதனை மேற்கொண்டிருக்க வேண்டும் என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா (ஆகஸ்ட் 28) தெரிவித்தார்.

பரிந்துரைக்கப்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் பட்சத்தில், அதற்கு ஏற்ப இடம் இருந்தால், அதனை தனிமைப்படுத்தப்பட்ட இடமாகப் பயன்படுத்தலாம், என்றார்.

நிபந்தனைகள்

  • குடிமகன் அல்லது வெளிநாட்டு பயணிகளுக்கு, மலேசியாவில் ஒரு வீடு அல்லது வசிக்கும் இடம் இருக்க வேண்டும்
  • COVID-19 தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்
  • முழுமையாக தடுப்பூசி போட்டிருக்கபட வேண்டும்
  • கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப வீடு அல்லது வசிக்கும் இடம் இருக்க வேண்டும்

அப்படி நிபந்தைகளை பூர்த்திசெய்ய தவறினால், அரசாங்கம் ஏற்படுத்திய தனிமைப்படுத்தும் இடங்களில் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதற்கு கட்டணம் செலுத்தவேண்டும்.

கட்டுமான நிறுவனத்திடம் லஞ்சம் – ஒப்பந்த ஊழியர் மீது குற்றச்சாட்டு