ஆகஸ்டில் ஒட்டுமொத்தமாக பெய்ய வேண்டிய மழை… ஒரே நாளில் கொட்டித் தீர்த்தது!

heaviest-rainfall-western-singapore-PUB
Photo via PUB/FB

இன்று ஆகஸ்ட் 24 காலை, நீடித்த கனமழை காரணமாக, அப்பர் புக்கிட் திமா பகுதி, உட்லேண்ட்ஸ் மற்றும் சன்செட் டிரைவ் ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

Dunearn சாலையில் (சைம் டர்பியிலிருந்து பிஞ்சாய் பூங்கா வரை) வெள்ளம் காரணமாக, வாகனங்கள் கடந்து செல்ல முடியாத சூழல் உருவானது.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதி ஒன்றில் 59 பேருக்கு தொற்று பாதிப்பு

பொது பயனீட்டு கழகம் – PUBன் தகவலின்படி, மேற்கு சிங்கப்பூரில் அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

இன்று காலை 7:50 மணி முதல் 10:40 மணி வரை, புக்கிட் பஞ்சாங் சாலையில் 159.8 மிமீ மழை பதிவானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று பதிவான மழையின் அளவு ஆகஸ்ட் மாதத்தின், சிங்கப்பூரின் சராசரி மாதாந்திர மழையின் அளவு 109 சதவிகிதத்தோடு ஒத்திருக்கிறது.

கடந்த வாரம், தெம்பனீஸ் மற்றும் பாசிர் ரிஸ் ஆகிய இடங்களில், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது குறிப்பிடத்தக்கது.

புக்கிட் படோக்கில் தரையில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு – காணொளி