புக்கிட் படோக்கில் தரையில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு – காணொளி

A screengrab from a video

புக்கிட் படோக்கில் புதை சாக்கடையில் திடீர் வெடிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிளாக் 439 புக்கிட் படோக் வெஸ்ட் அவென்யூ 8-ல் அடுக்குமாடி குடியிருப்பு கார்பார்க் வெளியே வெடிப்பு சம்பவம் ஏற்பட்டதாக காணொளி வெளியாகியுள்ளது.

சிங்கப்பூரில் திடீர் வெள்ளம்: இந்த பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் – PUB எச்சரிக்கை.!

சிங்கப்பூர் குடிமை பாதுகாப்புப் படை (SCDF) வாகனம், காவல்துறை பாதுகாப்புடன் காணப்படுகிறது. வெடிப்பு நடந்த இடத்தை சுற்றி செங்கற்கள் சிதறிக்கிடப்பதையும் காணமுடிகிறது.

காலை 9.10 மணியளவில் இந்த திடீர் தீ சம்பவம் குறித்து அழைப்பைப் பெற்றதாகவும், சம்பவ இடத்திற்கு வந்தபோது தீ இல்லை என்றும், அல்லது எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் SCDF கூறியுள்ளது.

மேலும், இந்த சம்பவம் தற்செயலானது என்றும், விசாரணைகள் நடந்து வருவதாகவும் SCDF கூறியது.

எப்போது வெளியே செல்வோம் என்ற ஒரே கேள்வியுடன் தனிமையில் வாடும் வெளிநாட்டு ஊழியர்கள்…