சிங்கப்பூரில் திடீர் வெள்ளம்: இந்த பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் – PUB எச்சரிக்கை.!

Singapore PUB floods warning
Pic: SG Traffic Accident

சிங்கப்பூரில் சில பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக Dunearn சாலை பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் நிறுவனமான (PUB) தெரிவித்துள்ளது.

கனமழை காரணமாக Dunearn சாலையின் Sime Darby-யிலிருந்து Binja பூங்கா வரை வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் நிறுவனம் அதன் முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

வெள்ளம் ஏற்பட்டுள்ள பகுதியில் பாதிப்புகளை சரிசெய்ய அதிகாரிகள் அந்த பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக PUB தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் தலைவர்களுடன் அமெரிக்க துணை அதிபர் சந்திப்பு.!

மேலும், சில இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் அந்த பகுதிகளுக்கு செல்வதை அடுத்த ஒரு மணி நேரத்திற்கு தவிர்ப்பது நல்லது என இன்று காலை 9.45 மணியளவில் PUB அறிவுறுத்தியுள்ளது.

• Upp Bt Timah Road, from Hazel Park Terrace to Chestnut Drive.
• Woodlands Road/KJE
• Sime Darby Centre
• Sunset Drive/Sunset Way

கனமழை காரணமாக மேற்கண்ட அந்த பகுதியில் உள்ள கால்வாய்கள் சுமார் 90 விழுக்காடு நிரம்பியுள்ளது என்றும் PUB குறிப்பிட்டுள்ளது.

எப்போது வெளியே செல்வோம் என்ற ஒரே கேள்வியுடன் தனிமையில் வாடும் வெளிநாட்டு ஊழியர்கள்…