சிங்கப்பூர் தலைவர்களுடன் அமெரிக்க துணை அதிபர் சந்திப்பு.!

Kamala Harris meet leaders
Pics: @tparti / Halimah Yacob

சிங்கப்பூர் பிரதமர் திரு. லீயின் அழைப்பை ஏற்று மூன்று நாள் அரசு முறை பயணமாக அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் நேற்று (23-08-2021) சிங்கப்பூர் வந்தடைந்தார்.

சிங்கப்பூருக்கு வருகை தந்த அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் பயா லெபார் விமான தளத்திற்கு சென்று வரவேற்றார்.

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் அதிகாரத்துவப் பயணத்தின் முதல் நாளான இன்று சிங்கப்பூர் பிரதமர் திரு லீ மற்றும் அதிபர் ஹலிமா யாக்கோப் ஆகியோரை சந்தித்தார்.

எப்போது வெளியே செல்வோம் என்ற ஒரே கேள்வியுடன் தனிமையில் வாடும் வெளிநாட்டு ஊழியர்கள்…

சிங்கப்பூர் பிரதமர் திரு லீ அவர்களுடன் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்
இன்று செய்தியாளர் சந்திப்பை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பங்காளித்துவம் தென்கிழக்காசியாவிற்கும் இந்தோ பசிபிக் வட்டாரத்திற்கு ஏன் அவசியம் என்பதை மையமாகக் கொண்டு இந்த செய்தியாளர் சந்திப்பு அமையும் என கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் இஸ்தானாவில் இன்று காலை நடைபெற்ற சந்திப்பின் போது, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவர்களுக்கு அவரது பெயர் சூட்டப்பட்ட ஆர்க்கிட் மலர்களை சிங்கப்பூர் பிரதமர் திரு லீ வழங்கினார்.

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொள்ள மலேசிய பிரதமர் விருப்பம்; அழைப்பு விடுத்த பிரதமர் திரு லீ.!