சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொள்ள மலேசிய பிரதமர் விருப்பம்; அழைப்பு விடுத்த பிரதமர் திரு லீ.!

Singapore Malaysia bilateral relationship
Pics: Bernama, MCI

மலேசியாவின் 9வது பிரதமராக பதவியேற்றுள்ள இஸ்மாயில் சப்ரி யாகூப்பிற்கு (Ismail Sabri Yaakob) சிங்கப்பூர் பிரதமர் திரு. லீ அவர்கள் முன்னதாக வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இந்நிலையில், பிரதமர் திரு லீயின் வாழ்த்துக்களுக்கு நன்றியைத் தெரிவித்த மலேசிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப், சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.

சிங்கப்பூர் பிரதமர் திரு லீ அவர்களிடம் தொலைபேசி மூலம் உரையாடிய மலேசிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப், தேசிய தின வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

வாட்ச்மேன் மகள் முதல் சிங்கப்பூர் மகள் வரை.. முதல் பெண் அதிபர் ஹலிமா யாகூப் கடந்து வந்த பாதை!

மலேசியா, சிங்கப்பூர் இடையிலான இருதரப்பு உறவை வலுப்படுத்த இஸ்மாயில் சப்ரி யாகூப் பிரதமர் திரு லீயிடம் உறுதி கூறினார். மேலும்,
சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டு பிரதமர் திரு லீ அவர்களை சந்திக்க தான் எதிர்பார்த்திருப்பதாக அவர் முகநூல் பதிவில் குறிப்பிட்டார்.

நீண்ட கால நட்புறவை இரு நாடுகளும் எப்படி பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது குறித்து கலந்துரையாட ஆர்வமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

மலேசிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப் அவர்களை சிங்கப்பூருக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்ளுமாறு பிரதமர் திரு. லீ அழைப்பு விடுத்தார்.

“கொரோனா சூழலிலும் தங்கள் கடமைகளை தாண்டி சேவையாற்றும் வெளிநாட்டு ஊழியர்கள்”