வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதி ஒன்றில் 59 பேருக்கு தொற்று பாதிப்பு

Google Maps Screengrab

சிங்கப்பூரில் நேற்று (ஆக. 23) நண்பகல் நிலவரப்படி, உள்நாட்டில் புதிதாக 94 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.

இதில் உட்லண்ட்ஸில் உள்ள நார்த் கோஸ்ட் லாட்ஜ் தங்கும் விடுதியில் 59 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) கூறியுள்ளது.

கோம்பக் ராணுவத் தளத்தில் இறந்து கிடந்த SAF வீரர்

ஆக. 21, வழக்கமான சோதனையின் போது மூன்று குடியிருப்பாளர்களுக்கு COVID-19 தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதுவரை, சுமார் 2,200 ஊழியர்களுக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், மீதமுள்ள 3,200 குடியிருப்பாளர்களுக்கான சோதனை நடந்து வருகிறது என்றும் MOH தெரிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விடுதியில் உள்ள அனைத்து குடியிருப்பாளர்களும் நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளுக்கு பெரும்பாலும் அறிகுறிகள் கண்டறியப்படவில்லை அல்லது லேசான அறிகுறிகள் இருந்ததாக MOH கூறியுள்ளது.

புக்கிட் படோக்கில் தரையில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு – காணொளி