சிங்கப்பூரில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?

Pic: Roslan RAHMAN/AFP

சிங்கப்பூரில் செப்டம்பர் மாதம் முதல் பாதியில் குறைந்த ஈரமான வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் (MSS) தெரிவித்துள்ளது.

இருப்பினும், தீவின் பெரும்பாலான பகுதிகளில் சராசரிக்கும் அதிகமான அளவு மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்குப் பருவமழை இந்த வட்டாரத்தில் தொடர்ந்து இருக்கும் என்பதால் அடுத்த இரு வாரங்களுக்கு மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறியும் இணைய ஊடுருவிகளுக்கு வெகுமதிகள்!’

சிங்கப்பூரின் சில பகுதிகளில் பெரும்பாலான நாட்களில் காலை முதல் பிற்பகல் வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தின் கடைசி இரண்டு வாரங்கள் போல் இல்லாமல், சில நாட்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதம் முதல் இரண்டு வாரங்களில், பெரும்பாலான நாட்களில் தினசரி வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், மழை பெய்யும் ஓரிரு நாட்களில் தினசரி வெப்பநிலை சுமார் 22 டிகிரி செல்சியஸ் ஆக குறையலாம்.

இரவு விருந்தில் அதிக நபர்களை அனுமதித்த உணவகம் மீது குற்றச்சாட்டு.!