இரவு விருந்தில் அதிக நபர்களை அனுமதித்த உணவகம் மீது குற்றச்சாட்டு.!

Hotel breaching Covid-19 measures
Pic: STB

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறிய உணவகத்தின் மீது நீதிமன்றத்தில் இன்று (01-09-2021) குற்றம் சாட்டப்பட உள்ளது.

ஏஷியா பைலிங் என்ற நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் 6ம் தேதி இரவு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அந்த விருந்தின்போது, வளாகத்தில் 65 பேர் ஒன்று கூட அனுமதித்த காரணத்திற்காக உணவகம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சாங்கி விமான நிலையத்தின் முனையம் 1 மற்றும் 3 பொது மக்களுக்கு மீண்டும் திறப்பு

டர்ஃப் சிட்டி பகுதியில் அமைந்துள்ள ‘ஆ யாட் அபலோன் ரெஸ்டாரன்ட் ஹோல்டிங்ஸ்’ என்ற அந்த உணவகத்தின் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளதாக சிங்கப்பூர் நில ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், விருந்தை ஏற்பாடு செய்த நிறுவனத்தின் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் முதல் முறை விதிமீறுவோருக்கு S$10,000 வரை அபராதம் ஆறு மாதங்கள் வரை சிறை அல்லது இவ்விரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.

தாயகம் சென்றால் சிங்கப்பூருக்கு திரும்பிவர முடியாமல் போய்விடுமோ.? – குழப்பத்தில் வாடும் வெளிநாட்டு ஊழியர்கள்.!