சாங்கி விமான நிலையத்தின் முனையம் 1 மற்றும் 3 பொது மக்களுக்கு மீண்டும் திறப்பு

Changi Airport stole Woman arrested
Pic: TODAY

மூன்று மாதங்களுக்குப் பிறகு கடைகள் மற்றும் உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பலர், இன்று (செப். 1) சாங்கி விமான நிலையத்தின் முனையம் 1 மற்றும் முனையம் 3க்கு திரும்பினர்.

அவைகள் பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து, இன்று புதன்கிழமை காலை இரண்டு முனையங்களிலும் போக்குவரத்து நெரிசல் சற்று இருந்தது.

தாயகம் சென்றால் சிங்கப்பூருக்கு திரும்பிவர முடியாமல் போய்விடுமோ.? – குழப்பத்தில் வாடும் வெளிநாட்டு ஊழியர்கள்.!

ஆனால், வார இறுதியில் மக்கள் கூட்டம் வரும் என்ற நம்பிக்கையுடன் அங்கு வேலை செய்யும் சில்லறை ஊழியர்கள் இருந்தனர்.

கூடுதலாக, முனையங்களில் AC மற்றும் இயந்திர காற்றோட்டம் அமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

விமான நிலைய ஊழியர்கள் பொதுமக்களுடனான தொடர்பை குறைப்பதற்காக விமான நிலையம் ஒரு பிரத்யேக ஓய்வு மற்றும் சாப்பாட்டு இடத்தையும் அமைத்துள்ளது.

முனையம் மூன்றில் கோவிட் -19 குழுமம் கண்டறியப்பட்ட பின்னர், ஜுவல் சாங்கி விமான நிலைய முனையம் 1 மற்றும் 3, கடந்த மே 1ஆம் தேதி மூடப்பட்டது.

அந்த குழுமத்தில் 108 பேர் பாதிக்கப்பட்டனர், அவர்களில் 43 பேர் விமான நிலைய ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு நாட்களுக்கு முன்பு காணாமல் போன ஆடவர் – இறந்த நிலையில் கண்டெடுப்பு