நான்கு நாட்களுக்கு முன்பு காணாமல் போன ஆடவர் – இறந்த நிலையில் கண்டெடுப்பு

miised elderly man passed away
Photo: SingPost

நான்கு நாட்களுக்கு முன்பு காணாமல் போன முதியவர் ஒருவர் இறந்துவிட்டார் என செய்தி வெளியாகியுள்ளது, அவரது உடல் சிங்போஸ்ட் நிலையத்தில் காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து முதியவரின் உறவினர் ஒருவர், நேற்று ஆக. 31 அன்று பேஸ்புக்கில் பொதுமக்களுக்குத் தெரிவித்தார்.

வெளிநாட்டு ஊழியர்களைத் தவிக்கவிட்ட கோவிட்-19 தாெற்று!

காவல்துறையிடம் தகவல்

அன்று பிற்பகல் 3:14 மணிக்கு 10 யூனோஸ் சாலை 8 – சிங்க்போஸ்ட் நிலையத்தில் இயற்கைக்கு மாறான மரணம் குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் காவல் படை கூறியது.

முதியவர் அங்கு அசைவில்லாமல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது, பின்னர் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது.

பேஸ்புக் பதிவு

நேற்று மாலை 7:16 மணிக்கு பதிவில், முதியவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது என்றும், அவர் உயிரிழந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த இறப்பு செய்தி குறித்து தகவல் தெரிவிக்க, ஹெய்க் சாலையில் உள்ள அவரின் வீட்டிற்கு காவல்துறை சென்றனர் என்றும் பதிவில் அவர் கூறியுள்ளார்.

மேலும், இதுகுறித்த மேலதிக தகவலை கூற முடியவில்லை என்று கூறிய அவர், காவல்துறை இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர், என்றார்.

கடந்த சில நாட்களாக உதவி செய்த அனைவருக்கும் நன்றியை அவர் தெரிவித்தார்,

முதற்கட்ட விசாரணையில், சதி செயல்கள் ஏதும் சந்தேகிக்கவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

விசாரணைகள் நடந்து வருகின்றன.

இந்தியர்களை குறிவைத்து இனவாதம் நிகழ்த்தப்பட இரு காரணங்கள் இருக்கலாம் – பிரதமர் லீ