இந்தியர்களை குறிவைத்து இனவாதம் நிகழ்த்தப்பட இரு காரணங்கள் இருக்கலாம் – பிரதமர் லீ

Photo: SUWANRUMPHA / AFP

கோவிட்-19 தொற்றுகாலத்தில் ஏற்பட்ட பல இனவாத சம்பவங்களை பிரதமர் லீ, தமது உரையில் சுட்டிக்காட்டினார்.

இனங்களுக்கிடையிலான நடந்த இச்சம்பவங்களில் இந்தியர்களை குறிவைத்து நிகழ்த்தப்பட இரு காரணங்கள் இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

“சமூகத்துடன் ஒன்றிணைய வெளிநாட்டினர்கள் சிங்கப்பூரினைப் புரிந்து நடந்துக்காெள்ள வேண்டும்”

பிரதமர் லீ தமது உரையில் இனம் மற்றும் சமயத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்திருந்தார்.

இந்தியர்களை குறிவைத்து நிகழ்த்தபடுவதற்கு முதல் காரணம் சிங்கப்பூரில் வேலை அனுமதியில் பணிபுரியும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது.

“இரண்டாவது காரணம் இந்தியாவில் முதன்முதலில் தாேன்றிய டெல்டா வேரியன்ட் என்ற கோவிட்-19 தொற்றுக் கிருமியாகும். ஆனால் இதற்கான பழியை இந்தியர்கள் மீது சுமத்துவது ஏற்புடையது அல்ல.”

இதுபோன்ற சூழலில் ஏற்படக்கூடிய விரக்தி மனபான்மை இன நல்லிணக்கத்தைப் பாதித்து விடக்கூடாது என கூறினார் பிரதமர் லீ.

வேலை அனுமதி எண்ணிக்கையை முறைப்படுத்துவது, நம் நாட்டிற்குள் வருவோருடைய சுகாதார பாதுகாப்பு பரிசோதனையை சீர்ப்படுத்துவது போன்று, பிரச்சினைகளுக்கான உண்மையான தீர்வை செயல்படுத்த வேண்டுமென்று பிரதமர் தெரிவித்தார்.

கடுமையாகும் எம்பிளாய்மண்ட் பாஸ், S-பாஸ் அடிப்படைத் தகுதி