கடுமையாகும் எம்பிளாய்மண்ட் பாஸ், S-பாஸ் அடிப்படைத் தகுதி

Roslan Rahman/AFP

சிங்கப்பூரர்களின் வேலையின்மைை கவலையைப் போக்கும் விதமாக இனி வரும் காலங்களில் எம்பிளாய்மண்ட் பாஸ் & S-பாஸ்களுக்கான அடிப்படைத் தகுதி & ஊழியர்களின் தரம் ஆகியவை காலப்போக்கில் கடுமையாக்கப்படும்.

மேலும், சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டினரும் உள்ளூர் நெறிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் பின்பற்ற வேண்டும்.

குறைந்த வருமான தொழிலாளர்கள் இரண்டு ஆண்டுக்குள் மேம்படுத்தப்பட்ட சம்பளம் பெறுவர்!

அதேபோல சிங்கப்பூரர்களும் வெளிநாட்டினருடன் சேர்ந்து வாழ வேண்டும் என பிரதமர் லீ சியன் லூங் தமது தேசிய தினப் பேரணி உரையில் குறிப்பிட்டார்.

பணியிடங்களில் அனைத்து ஊழியர்களும் நியாயமாக நடத்தப்படுவார்கள் என்றும் உத்தரவாதம் அளித்தார். எம்பிளாய்மண்ட் பாஸ் & S-பாஸ்களுக்கான அடிப்படைத் தகுதி உடனே கடுமையாக்கப்படாது.

ஏனெனில், வெளிநாட்டினர் வேலை அனுமதிக்கான தகுதி அடிப்படையை உடனே கடுமையாக்கினால் வர்த்தகங்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகும். இருப்பினும் காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றங்கள் கொண்டு வரப்படும்.

மேலும், வேலை அனுமதிச்சீட்டில் இருப்பவர்களின் அதிகரிப்பினால் அமைதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது என்றும், இந்நிலை கோவிட்-19 தாெற்றுக்கு முன்பே நிலவியது என்பதையும் பிரதமர் லீ சுட்டிக்காட்டினார்.

அனுமதிச்சீட்டில் உள்ள வெளிநாட்டவர்கள் தமது ஊழியர்க்குழுவைக் கொண்டு பொருளாதாரத்தை வளர்க்க இங்கு வருகிறார்கள் என்றும், இதனால் உள்ளூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கிறது என்று தெரிவத்த பிரதமர் லீ.

அதேசமயம் கடந்த ஆண்டைக் கணக்கிடும் போது, வெளிநாட்டு ஊழியர்க்குழு குறையும் போது உள்ளூர்வாசிகளுக்கு ஏற்படும் வேலையின்மைையை தடுக்க உதவுவதாகவும் இது இருக்கிறது என்பதையும் குறிப்பிட்டார்.

பல சிங்கப்பூரர்கள் இதைப் புரிந்துக் கொண்டாலும், பணியிடத்தில் ஏற்படும் பணிகளுக்கான பாேட்டிகளினால் தனிப்பட்ட வாழ்க்கையைச் சார்ந்த பல்வேறு உணர்வுப் பூர்வமான மனவாதங்களும் நிலவுகிறது என்கிறார் பிரதமர் லீ.

சிங்கப்பூரில் முஸ்லிம் செவிலியர்கள் சீருடையுடன் ஹிஜாப் அணிய அனுமதி.!