சிங்கப்பூரில் முஸ்லிம் செவிலியர்கள் சீருடையுடன் ஹிஜாப் அணிய அனுமதி.!

Muslim nurses wear hijab
Pic: iStock

சிங்கப்பூரில் பொது சுகாதாரப் பராமரிப்பு துறையில் பணிபுரியும் முஸ்லிம் செவிலியர்கள் சீருடையுடன் ஹிஜாப் அணிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதாரப் பராமரிப்பு துறையில் சீருடை அணியும் 7,000-க்கும் மேற்பட்ட முஸ்லிம் செவிலியர்களுக்கு ஹிஜாப் அணியலாம் என்ற புதிய அறிவிப்பு பொருந்தும் என சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

பிரதமரின் தேசிய தின பேரணி உரையில் இடம் பெற்ற முக்கிய அறிவிப்புகள்!

ஹிஜாப் அணியும் முஸ்லிம் செவிலியர்களுக்கு சீருடைக் கோட்பாடு அமைச்சகம் நியமித்த செயல்பாட்டு வழிகாட்டிக் குழுவும், மருத்துவ ஆலோசனைக் குழுவும் வகுத்தளித்த அம்சங்களின் அடிப்படையில் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் செவிலியர்கள் சீருடையுடன் ஹிஜாப் அணிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதற்கு மலாய் முஸ்லிம் சமூகம் வரவேற்றுள்ளதாக முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி (Masagos Zulkifli) தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மலாய் முஸ்லிம் சமூகத்தினருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக அவர் கூறினார்.

“அனைத்து குறைந்த ஊதிய ஊழியர்களும் அதிக வருமானத்தை எதிர்பார்க்கலாம்”