குறைந்த வருமான தொழிலாளர்கள் இரண்டு ஆண்டுக்குள் மேம்படுத்தப்பட்ட சம்பளம் பெறுவர்!

Reuters File Photo

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், தனது தேசிய தின பேரணி உரையின் போது பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். குறிப்பாக, தொழிலாளர்களுக்கான பல்வேறு அறிவிப்புகளும் அதில் இடம் பெற்றிருந்தனர்.

அதன்படி, சிங்கப்பூரில் குறைந்த வருமானம் பெறும் தொழிலாளர்களில் சுமார் 2,34,000 பேர், இரண்டு ஆண்டுக்குள் மேம்பட்ட சம்பளம் பெறவுள்ளனர். படிப்படியாக உயரும் சம்பள முறை போன்ற திட்டங்கள், 94% தொழிலாளர்களை உள்ளடக்கும் வகையில் விரிவாக்கப்பட உள்ளது. சில்லறை வர்த்தகம், உணவு, பானச் சேவைகள், கழிவு நிர்வாகம் உள்ளிட்டத் துறைகள் அந்தத் திட்டங்களின் கீழ் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

டோக்கியோ பாராலிம்பிக்: சிங்கப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவளியுங்கள் – பிரதமர் திரு லீ!

அலுவலக நிர்வாக ஊழியர்கள், போக்குவரத்து ஓட்டுநர்கள் போன்றோர் அதன் மூலம் பயனடைவர். படிப்படியாக உயரும் சம்பள முறையின் கீழ், அவர்களுக்குக் கட்டாய அடிப்படைச் சம்பளம் வழங்கப்படும். வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து வெளிநாட்டிநர்களை வேலைக்கு எடுத்தால், உள்ளூர் தொழிலாளர்கள் அனைவரின் சம்பளமும் குறைந்தபட்சம் 1,400 சிங்கப்பூர் டாலராக இருக்க வேண்டும். அதேபோல், பகுதி நேர தொழிலாளர்களின் சம்பளம், மணிக்கு 9 சிங்கப்பூர் டாலராக இருக்க வேண்டும்.

குறைந்த வருமான தொழிலாளர்களுக்கான முத்தரப்பு பணிக்குழு அரசாங்கத்திடம் அளித்திருக்கும் மூன்று பரிந்துரைகளில் இதுவும் ஒன்று. மூன்று பரிந்துரைகளையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. படிப்படியாக உயரும் சம்பள முறையைக் கடைப்பிடிக்கும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் விதமாக அதற்கான முத்திரை வழங்கப்படும்.

சிங்கப்பூரில் கனமழை – தோ பாயோவில் மொத்தம் 100மிமீ மழை பதிவு

எம்பிளாய்மெண்ட் பாஸ், எஸ்- பாஸ் வைத்திருக்கும் தொழிலாளர்களின் தரம் ஆகியவற்றில் சிங்கப்பூரர்கள் கொண்டிருக்கும் கவலைகளைப் போக்கும் வண்ணம் இனி வரும் காலங்களில் எம்பிளாய்மெண்ட் பாஸ், எஸ்- பாஸ் ஆகியவற்றுக்கான தகுதி அடிப்படை காலப்போக்கில் கடுமையாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.