டோக்கியோ பாராலிம்பிக்: சிங்கப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவளியுங்கள் – பிரதமர் திரு லீ!

Support Singapore paralympians pmlee
Pic: Team Singapore

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகளில் சிங்கப்பூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களும் பங்கெடுத்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 25ம் பெண்களுக்கான 100 மீட்டர் backstroke S2 போட்டியில் பங்கேற்ற சிங்கப்பூர் நீச்சல் வீராங்கனை யிப் பின் சியு (Yip Pin Xiu) தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.

சிங்கப்பூரில் கனமழை – தோ பாயோவில் மொத்தம் 100மிமீ மழை பதிவு

தங்கப் பதக்கத்தை வென்ற சிங்கப்பூர் நீச்சல் வீராங்கனை யிப் பின் சியுவிற்கு சிங்கப்பூர் பிரதமர் திரு லீ வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் சிங்கப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு அனைவரையும் சிங்கப்பூர் பிரதமர் திரு லீ கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், சிங்கப்பூரில் நேற்று (ஆகஸ்ட் 29) நடைபெற்ற பிரதமரின் தேசிய தின பேரணி உரையின் தொடக்கத்தில் சிங்கப்பூர் விளையாட்டாளர்களின் முயற்சிகள் குறித்து பிரதமர் திரு லீ பாராட்டினார்.

சிங்கப்பூரில் முஸ்லிம் செவிலியர்கள் சீருடையுடன் ஹிஜாப் அணிய அனுமதி.!