“சமூகத்துடன் ஒன்றிணைய வெளிநாட்டினர்கள் சிங்கப்பூரினைப் புரிந்து நடந்துக்காெள்ள வேண்டும்”

(Photo: TODAY)

வேலையிடங்களில் வரும் அதிக வேலை அனுமதிச்சீட்டுள்ள ஊழியர்களினால் ஏற்படும் பிரச்சினைகளை கவனம் கொண்டு தீர்ப்பது போல், அவர்களிடையே ஏற்படும் இதர தாக்கத்திலும் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.

சிங்கப்பூரில் வேலை செய்யும் சீனர்களோ, மலாய்க்காரர்களோ அல்லது இந்தியர்களோ, அவர்களது கலாச்சார ரீதியாக சிங்கப்பூரர்களை விட்டு வேறுபட்டுள்ளனர் என்கிறார் பிரதமர் லீ.

கடுமையாகும் எம்பிளாய்மண்ட் பாஸ், S-பாஸ் அடிப்படைத் தகுதி

வெளிநாட்டவர்களில் சிலர் இனரீதியாக சிங்கப்பூரர்களைப் போன்று இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் சிங்கப்பூரர்களின் கலாச்சாரத்தை பின்பற்றுவதில்லை, இந்நிலையைப் புரிந்துக் கொள்வது சற்று கடினமானது.

“சில தலைமுறைகளுக்கு பின் சிங்கப்பூர் இந்தியர்கள் இந்தியாவின் இந்தியர்களைவிடவும், சிங்கப்பூர் சீனர்கள் சீனாவின் சீனர்களைவிடவும் மாறுபட்டு இருப்பதாக, ஒரு வெளிநாட்டு தலைவருடன் சிங்கப்பூரின் பல இனத்தைப் பற்றி விளக்க முற்பட்டேன்.”

ஆனால், தாம் விளக்கிய ஆங்கிலம் அவருக்கு புரிந்தாலும், தான் விளக்க முற்பட்ட கருத்தை அவரால் புரிந்துக் கொள்ள முடியவில்லை என்று தான் உணர்ந்ததாகவும் பிரதமர் லீ கூறினார்.

வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து குடும்பத்துடன் குடியேறுபவர்கள், வேலை அனுமதிச்சீட்டிலுள்ள ஊழியர்கள், அவர்களது பழக்கவழக்கங்களையும் அவர்களின் நாட்டில் உள்ள வர்க்க பேதங்களையும் சிங்கப்பூருக்குள் கொண்டு வருகிறார்கள்.

இச்செயல் சிங்கப்பூரர்கள் ஒருவருக்கு ஒருவர் சமமாக பாகுபாடின்றி பழகுவதற்கு இடையூறு ஏற்படுத்தும். இதனால் பல பிரச்சினைகள் உண்டாகும்.

எனவே, வெளிநாட்டினர்கள் எல்லா சமூகத்துடன் ஒன்றிணைய சிங்கப்பூரினைப் புரிந்து நடந்துக்காெள்ள வேண்டும் என்றார் பிரதமர் லீ.

சிங்கப்பூரில் கனமழை – தோ பாயோவில் மொத்தம் 100மிமீ மழை பதிவு