வெளிநாட்டு ஊழியர்களைத் தவிக்கவிட்ட கோவிட்-19 தாெற்று!

(Photo: Overseas Foreign Workers in Singapore/FB)

சிங்கப்பூரர்களின் கவலையையும், வெளிநாட்டவர்கள் சார்ந்த காேபங்களைக் குறைக்கவும் வேலை அனுமதியில்  ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றியும் நாம் பேசினால் தான் சிங்கப்பூர்  சிறந்த சமூகமாக தாெடர்ந்து முன்னேற முடியும் என பிரதமர் லீ  கூறினார்.

சிங்கப்பூரர்கள் வெளிநாட்டினவர்களிடம் மட்டும் போட்டி போடவில்லை, உலகில் உள்ள அனைவருடனுமே போட்டிப் போடுகிறோம் என்பதே உண்மை என்று அவர் தெரிவித்தார்.

இந்தியர்களை குறிவைத்து இனவாதம் நிகழ்த்தப்பட இரு காரணங்கள் இருக்கலாம் – பிரதமர் லீ

எங்கிருந்து வேண்டுமானாலும் வேலை செய்யலாம் என்னும் நிலையிலிருந்து, வீட்டிலிருந்துதான் வேலை செய்ய வேண்டும் எனும் சூழ்நிலைக்கு காேவிட்-19 பல நிறுவனங்களை தள்ளியுள்ளது.

காேவிட்-19 சூழல் பல வெளிநாட்டவர்களை தனிப்பட்ட முறையில் பாதித்துள்ளது. தங்கள் குடும்பங்களை நீண்ட காலமாக பிரிந்து வாழும் அவர்கள், தங்கள் நாட்டுக்கு திரும்ப முடியாத நிலையையும் பிரதமர் லீ நினைவுக் கூறினார்.

மேலும், வெளிநாட்டினர் பலர் சிங்கப்பூரர்களுடன் ஒற்றுமையாக நின்று உழைத்துள்ளனர் என்றும், அவர்கள் சிங்கப்பூருக்கு பெரும் பங்களித்துள்ளனர் என்றும் கூறினார்.

வெளிநாட்டவர்களை புறக்கணித்து சிங்கப்பூர் வெளிநாட்டவருக்கு விரோதமான நாடு என்ற தாேற்றத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்றும், மாறாக சிறந்த பொருளியலாக தாெடர்வதை உலகுக்கு காட்ட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“சமூகத்துடன் ஒன்றிணைய வெளிநாட்டினர்கள் சிங்கப்பூரினைப் புரிந்து நடந்துக்காெள்ள வேண்டும்”