‘பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறியும் இணைய ஊடுருவிகளுக்கு வெகுமதிகள்!’

 

உலகில் நொடிக்கு நொடி தகவல் தொழில் நுட்பம் வளர்ந்து வரும் நிலையில், இணைய தளம் மூலம் நடைபெறும் குற்றச்சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, போலி இணைய தளங்கள் மூலம் பண மோசடி குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அத்துடன், போலி இணைய தளங்கள் மூலம் பல்வேறு முறைகேடுகளும் நடந்துக் கொண்டிருக்கின்றன. அதேபோல், தனிப்பட்ட நபரின் தகவல்களும் திருடப்படுகின்றன.

இரவு விருந்தில் அதிக நபர்களை அனுமதித்த உணவகம் மீது குற்றச்சாட்டு.!

இந்த நிலையில், இணைய தளங்கள் மூலம் பணம் மோசடி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிங்கப்பூரில் பல்லாயிரக்கணக்கானோரிடமிருந்து மோசடி கும்பல் போலி இணைய தளங்கள் மூலம் பணத்தைப் பறித்துள்ளது. இது தொடர்பாக, சிங்கப்பூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இதுவரை, பண மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக, சுமார் 500- க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில், பொதுமக்களுக்கும் காவல்துறை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், பொதுத் துறையின் இணையக் கட்டமைப்பில் பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டுபிடிக்கும் இணைய ஊடுருவிகளுக்குச் (Hackers) சிங்கப்பூர் அரசாங்கம் வெகுமதிகளை வழங்கவிருக்கிறது.

அதன்படி, ‘SingPass’, ‘CorpPass’ போன்ற முக்கியமான அரசாங்கத்தின் இணைய முறைகளில் பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டுபிடித்து, அதைப் பற்றி எங்களிடம் தெரிவிக்கும் நெறிமுறை இணைய ஊடுருவிகளுக்கு 2,02,000 சிங்கப்பூர் டாலர் வரை ரொக்க வெகுமதி வழங்கப்படும் என்று அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பு (கவ்டெக்) தெரிவித்துள்ளது.

சாங்கி விமான நிலையத்தின் முனையம் 1 மற்றும் 3 பொது மக்களுக்கு மீண்டும் திறப்பு

இணையப் பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிந்து, அதுப் பற்றி தெரிவிப்போருக்கு 200 அமெரிக்க டாலர் முதல் 5,000 அமெரிக்க டாலர் வரை, அவர்கள் தெரிவிக்கும் இணைய பாதுகாப்புக் குறைபாடுகளின் அபாயத்தைப் பொறுத்து வெகுமதி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

GoVTech- ன் இந்தப் புதிய திட்டம் அரசாங்கத்தின் முக்கியமான கட்டமைப்புகளை ஊடுருவிகளிடம் இருந்து பாதுகாக்க உதவும். GovTech- ன் கடுமையான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்த ‘White Hat Hacker’ இணைய ஊடுருவிகள் மட்டுமே இதில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

மிக முக்கியமான தகவல் தொடர்பு தொழில்நுட்ப முறைகளையும், தனிப்பட்டத் தரவுகளையும் பாதுகாப்பதை உறுதிச் செய்யும் வகையில், இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.