கட்டுப்பாடுகளை மீறி வெளியே சென்ற வெளிநாட்டவருக்கு சிறை

(Photo: TODAY)

சிங்கப்பூரில் கிருமித்தொற்றுக்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி வெளியே சென்ற 22 வயது பெண்ணுக்கு மூன்று வாரங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த பெண் தனது காதலனுடன் ஷாப்பிங் சென்றதற்காகவும், தனது நண்பருடன் நேரத்தை செலவழிக்கவும் வெளியே சென்ற குற்றத்திற்காக தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?

அதாவது, கோவிட் -19 சோதனை முடிவு வராத காரணத்தால், அந்த பெண்ணை வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்ட பிறகும் அவர் வெளியே சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய நாட்டை சேர்ந்த அவர், சிங்கப்பூர் நிரந்தரவாசி ஆவார். வீட்டில் தங்கும் உத்தரவை மீறி, ​​தங்குமிடத்தை விட்டு வெளியேறியதற்காக, தொற்றுநோய் விதிமுறைகளின்கீழ் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அவர் தொடர்ந்து இரண்டு நாட்கள் தன் வீட்டை விட்டு வெளியேறியதாக நீதிமன்ற ஆவணங்கள் காட்டுகின்றன.

MRT ரயில், பேருந்து மற்றும் சில கடைத்தொகுதிகளுக்கும் அவர் சென்றிருந்தார் என கூறப்படுகிறது.

இந்த மீறலுக்காக, ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை மற்றும்/ அல்லது S$10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

சாங்கி விமான நிலையத்தின் முனையம் 1 மற்றும் 3 பொது மக்களுக்கு மீண்டும் திறப்பு