“ஊழி­யர்­க­ளின் சம்பளத்தை உயர்த்த மொத்த சமூகத்தின் ஆதரவு அவசியம்”

via Facebook

குறைவான வருமானம் உடைய ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த முதலாளிகள், வாடிக்கையாளர்கள் ஆகிய இரு தரப்பினரும் ஆதரவு தர வேண்டும்.

ஏனெனில் உணவு, பானம் மற்றும் சில்லறை வணிகத் துறைகளில் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தும் போது பொருட்களின் விலையும் அதிகரிக்கக்கூடும்.

மற்றவர்களின் உடமைகளை போட்டோ எடுக்கும் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

இவ்வாறு பாசிர் ரிஸ் பொங்கோல் குழுத் தொகுதியின் பொங்கோல் ஷோர் பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின்  நடுத்தர நிறுவனங்களுக்கான பிரிவின் இயக்குனருமான திருவாட்டி இயாே வான் லிங் கூறினார்.

பொங்கோல் ஷோரில் உள்ள துப்புரவுப் பணியாளர்கள், சில்லறை வணிகம், உணவு மற்றும் பானத்துறை ஊழியர்களுக்கு பராமரிப்புப் பொருட்களைக் கொண்ட அன்பளிப்பு பைகளை வழங்கச் சென்ற போது அவர் இவ்வாறு கூறினார்.

கோவிட்-19 தொற்றுப் பர­வல் சூழ­லில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு நீண்ட நேரம் உழைக்கும் உள்ளூர் ஊழியர்களை ஆதரிக்க வேண்டும்.

உணவு, பானம் மற்றும் சில்லறை வணிகத் துறைகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக ஊதிய உயர்வை நடைமுறைப்படுத்த அனைவரும் ஆதரவளிக்க வேண்டிய அவசியத்தையும் தெரிவித்தார் திருவாட்டி இயோ வான் லிங்.

வெளிநாட்டு ஊழியர்களையே அதிகம் சார்ந்திருக்கும் லிட்டில் இந்தியா

பிரதமர் லீ சியன் லூங் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம், சுமார் 218,000 வரையிலான ஊழியர்களின் சம்பளம் படிப்படியாக உயர்த்தும் முறை நீட்டிக்கப்படும் என அறிவித்திருந்தார்.

திருவாட்டி இயோ கடந்த 2 நாட்களில் 2,300 அன்பளிப்புப் பைகளை, தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் மாதர் பிரிவுத் தலைவரான திருவாட்டி கே. தனலட்சுமி ஆகியோருடன் இணைந்து ஊழியர்களுக்கு வழங்கினார்.

ஒவ்வொரு பையிலும் 5 வகையான உணவுப் பொருட்களும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்சென்ற லாரி விபத்து: 5 பேர் காயம்.! (காணொளி)