பயணிகளும் வருகையின்போது ART விரைவு சோதனை கட்டாயம்

toddler-baby-boy-dies-covid-19-first-death-singapore 2023
Photo: Yahoo India

மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்குள் நுழையும் அனைத்துப் பயணிகளும் வருகையின்போது ART விரைவு சோதனை கட்டாயம் எடுக்க வேண்டும்.

அதாவது நில வழி பயணப் பாதை (VTL) ஏற்பாடு வழியாக சிங்கப்பூர் வரும் அவர்களுக்கு இது பொருந்தும். இதனை வர்த்தகம், தொழில்துறை அமைச்சகம் (MTI) இன்று (நவம்பர் 28) தெரிவித்துள்ளது.

மகனுக்கு விலையுயர்ந்த போன் வாங்கிக்கொடுத்த சிங்கப்பூரில் பணிபுரியும் தந்தை: அதனால் ஏற்பட்ட விபரீதம் – மகன் தற்கொலை

B.1.1.529 என அழைக்கப்படும் கோவிட்-19 வைரஸின் மாறுபாடு பற்றிய சமீபத்திய தகவலின் மத்தியில் இந்த சோதனை கட்டாயம் என்று MTI கூறியுள்ளது.

புதிய சோதனை நடவடிக்கை நாளை திங்கட்கிழமை காலை 8 மணி முதல் நடப்புக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ART சோதனை, உட்லண்ட்ஸ் தற்காலிக பேருந்து முனையம் மற்றும் குயின் ஸ்ட்ரீட் டெர்மினலில் நிர்வகிக்கப்படும்.

மேலும், இதற்கான கட்டணத்தை பயணிகள் நேரடியாக சோதனை நிலையத்தில் செலுத்த வேண்டும்.

திருச்சி, மதுரையில் இருந்து சிங்கப்பூர் செல்வோருக்கு தனிமை!