மகனுக்கு விலையுயர்ந்த போன் வாங்கிக்கொடுத்த சிங்கப்பூரில் பணிபுரியும் தந்தை: அதனால் ஏற்பட்ட விபரீதம் – மகன் தற்கொலை

Photo credit: Dailythanthi

தமிழ்நாடு, அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 18 வயதான செல்வகுமார் என்பவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

சிங்கப்பூரில் வேலை செய்யும் தந்தை கண்டித்ததால் செல்வகுமார் விஷம் குடித்ததாக கூறப்படுகிறது. அப்பா கொளஞ்சிநாதன், அம்மா தனலட்சுமி ஆகிய இருவரும் சிங்கப்பூரில் வேலை செய்கின்றனர்.

திருச்சி, மதுரையில் இருந்து சிங்கப்பூர் செல்வோருக்கு தனிமை!

என்ன நடந்தது?

பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்த செல்வகுமாரின் படிப்பிற்காக விலை உயர்ந்த கைபேசியை பெற்றோர்கள் வாங்கி கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், கொளஞ்சிநாதன் தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார், தனது மகன் அந்த கைபேசியை வைத்து கேம் விளையாடிக்கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, கொளஞ்சிநாதன் செல்வகுமாரை கண்டித்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் கடந்த 10ஆம் தேதி செல்வகுமார் விஷம் குடித்துள்ளார்.

அதன் பின்னர் அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி செல்வகுமார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிசம்பர் முதல் வழக்கமான சர்வதேச விமானங்களுக்கு இந்தியா அனுமதி – சிங்கப்பூருக்கு கட்டுப்பாடு