படிக்கட்டுகளில் இருந்து தள்ளிவிடப்பட்ட இந்திய வம்சாவளி மரணம்!

Photo: Google Maps

சிங்கப்பூரில் உள்ள ஆர்ச்சர்ட் சாலையில் (Orchard Road) பார்கள் மற்றும் இரவு விடுதிகள் உள்ள கான்கார்ட் ஷாப்பிங் மாலுக்கு (Concorde Shopping Mall) வெளியே படிக்கட்டில் இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 34 வயதான தேவேந்திரன் சண்முகத்தின் மார்பைப் பிடித்து தள்ளியதில், அவர் பின்னாள் விழுந்துள்ளார்.

இந்திய ஊழியருக்கு சிறைத் தண்டனை – வாகனத்தில் தூங்கியதால் நேர்ந்த கொடூரம்

இதில், சண்முகத்தின் தலை உடைந்தது. அதேபோல், அவரின் கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சண்முகம் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரின் உடல் வெள்ளிக்கிழமை மாலை அன்று மாண்டாய் மயானத்தில் (Mandai Crematorium) தகனம் செய்யப்பட்டுள்ளது.

சாங்கி விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் McDonald’s உணவகம் விரைவில் திறக்கப்படும் என அறிவிப்பு!

சம்பவம் நிகழ்ந்து ஒரு நாள் கழித்து, சண்முகத்தைத் தள்ளிய முஹம்மது அஸ்ஃபரி அப்துல் கஹா (வயது 27) என்பவரை சிங்கப்பூர் காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர் மீது சண்முகத்தைத் தள்ளி அவருக்கு கடுமையான காயத்தை ஏற்படுத்தியதாகக் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.

இருவரும் ஒருவரையொருவர் அறிந்திருந்ததாக நீதிமன்ற ஆவணத்தில் குறிப்பிடப்படவில்லை. குற்றம் நிரூபிக்கப்பட்டால் முஹம்மது அஸ்ஃபரி அப்துல் கஹாவுக்கு (Muhammed Azfary Abdul Kaha) 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், பிரம்பு அடி (அல்லது) அபராதம் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.