சாங்கி விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் McDonald’s உணவகம் விரைவில் திறக்கப்படும் என அறிவிப்பு!

Photo: McDonald's Official Facebook Page

சிங்கப்பூரில் உள்ள சாங்கி சர்வதேச விமான நிலையம் (Changi International Airport), சர்வதேச அளவில் மிகச்சிறந்த விமான நிலையமாக இருந்து வருகிறது. அதி நவீன வசதிகள், சிறந்த பொழுதுபோக்கு அம்சங்கள், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள கட்டிடமைப்பு உள்ளிட்டவை வெளிநாட்டு பயணிகளை வெகுவாக ஈர்க்கின்றது.’Transportation Hub’ என்றழைக்கப்படும் பன்னாட்டு விமான போக்குவரத்து மையமாகவும் திகழ்கிறது. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், இந்தியாவில் இருந்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல மிகப்பெரிய அளவில் நேரடி விமான சேவை கிடையாது.

பள்ளிவாசலில் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த பிரதமர் லீ சியன் லூங்!

எனவே, பயணிகள் முதலில் சிங்கப்பூருக்கு சென்று, பின்னர் அங்கிருந்து தாங்கள் செல்ல விரும்பும் நாடுகளுக்கு விமானத்தில் பயணிப்பர். இதனால் சாங்கி விமான நிலையத்தில் மாதந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். கொரோனாவுக்கு பிறகு, வழக்கமான விமான சேவை தொடங்கியுள்ளதாலும், தற்போது கோடைக்கால விடுமுறை தொடங்கியுள்ளதாலும் இந்த விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து, உச்சத்தைத் தொட்டுள்ளது.

இந்த நிலையில் சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் இரண்டாவது முனையத்தின் (Terminal 2) புதுப்பிப்பு பணிக் காரணமாக, கடந்த 2020- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அங்கிருந்த கடைகள் அனைத்தும் மூடப்பட்டது. இதில் 16 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த, McDonald’s உணவகமும் மூடப்பட்டது. இந்த நிலையில், அதே முனையத்தில் விரைவில் McDonald’s உணவகம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை சாங்கி சர்வதேச விமான நிலையம், தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 17- ஆம் தேதி அன்று ஸ்ரீ சிவன் கோயிலில் பிரதோஷ பூஜை!

இது குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வரும் பயணிகள், 24 மணி நேரமும் McDonald’s உணவகம் திறந்திருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

உலகளவில் பிரபல உணவகமான McDonald’s, சமீபத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.