விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த ஊழியர்: கட்டுமான நிறுவனத்தில் பாதுகாப்பு இல்லை – செக் வைத்த MOM

construction-firm-stop-work-order-worker-death
Facebook/MOM

சிங்கப்பூர் கட்டுமான நிறுவனமான Synergy-Biz வளாகத்தில் மனிதவள அமைச்சகம் (MOM) அதிரடி ஆய்வு நடத்தியது.

அப்போது, ​​ஊழியர்களுக்கு பாதுகாப்பற்ற பல சூழ்நிலைகள் அங்கு கண்டறியப்பட்டதை அடுத்து அந்நிறுவனத்துக்கு வேலை நிறுத்த உத்தரவு மற்றும் S$6,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்: திக் திக் நிமிடங்கள் – பயணி ஒருவர் கைது

கடந்த ஆகஸ்டு 25 அன்று, அந்த நிறுவனத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து MOM அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

லாரியில் ஃபோர்க்லிஃப்ட் இயந்திரத்தை ஏற்றி, பத்திரமாக அதனை கொண்டு செல்ல வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது இயந்திரம் 65 வயதான சிங்கப்பூர் ஊழியர் மீது ஏறியதில் அவர் உயிரிழந்தார்.

சம்பவத்தை தொடர்ந்து அடுத்த நாள் அந்நிறுவனத்தில் MOM ஆய்வு மேற்கொண்டது என்று அமைச்சகம் செவ்வாயன்று (செப். 27) ஒரு பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியின் 7 அறையில் இடிந்து விழுந்த மேற்கூரை: 100 பேர் வெளியேற்றம் – ஊழியர்களின் நிலை?