சிங்கப்பூரில் மூடப்பட்ட 2,200 கட்டுமான நிறுவனங்கள் – வெளிநாட்டு கட்டுமான ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?

singapore job foreign workers workplace rules
(Photo: Roslan Rahman/ Getty Image)

சிங்கப்பூரில் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 2,200 கட்டுமான நிறுவனங்கள் மூடப்பட்டதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டான் கியாட் நேற்று (பிப் 15) தெரிவித்தார்.

கடந்த 2018 மற்றும் 2020ஆம் ஆண்டுகளுக்கு இடையில், ஆண்டின் அடிப்படையில் செயல்பாடுகளை நிறுத்திய நிறுவனங்களின் சராசரி எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு நோக்குகையில் இது தெரியவந்துள்ளது.

சிங்கப்பூரில் கோவிட்-19 “ATM”… வேற லெவல் – அப்படி அதன் பயன் தான் என்ன?

2018ஆம் ஆண்டில் மொத்தம் 2,187 நிறுவனங்களும், 2019ஆம் ஆண்டில் 2,347 நிறுவனங்களும், 2020ஆம் ஆண்டில் 2,027 நிறுவனங்களும் செயல்பாடுகளை நிறுத்தியுள்ளன என்று திரு டான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கோவிட்-19 நோயால் ஏற்பட்ட செலவினங்களின் தாக்கத்தை சமாளிக்க கட்டுமான நிறுவனங்களுக்கு ஆதரவு நடவடிக்கைகள் உதவியதாக அவர் கூறினார்.

வேலையிடங்களில் பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளை செயல்படுத்த அதிகரித்த செலவினங்களுக்கு $1.36 பில்லியன் கட்டுமான ஆதரவு தொகுப்பு நிவாரணம் வழங்கபட்டது குறித்து அவர் பேசினார்.

மனிதவள செலவுகளை ஆதரிக்கும் ஆதரவு திட்டம் மற்றும் வெளிநாட்டு ஊழியர் வரி தள்ளுபடிகள் ஆகியவை அதில் அடங்கும்.

தொற்றுநோய் காரணமாக, கட்டுமானத் துறையானது பெரிதும் பாதிக்கப்பட்டது. அதாவது ஆள் பற்றாக்குறை, அதிகரித்து வரும் பொருள் செலவுகள் மற்றும் பணப்புழக்கப் பிரச்சினைகளால் அவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் வெளிநாட்டு ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று கணிக்கப்படுகிறது. இந்த பிரச்சனையை சரி செய்ய, வெளிநாட்டிலிருந்து அதிக கூடுதல் கட்டுமான ஊழியர்கள் சிங்கப்பூருக்கு வருவதற்கு மனிதவள அமைச்சு வகை செய்துள்ளது.

மசாஜ் பார்லரில் பணிபுரியும் பெண்களின் தவறான செயல்… கட்டாயப்படுத்தியதாக போலீசை அழைத்த இரு ஆடவர்கள்!