சிங்கப்பூரில் 8 கார்களை அடித்து உடைத்த வெளிநாட்டு கட்டுமான ஊழியர் – ஏன் அவ்வாறு செய்தார்?

migrant worker jailed in singapore
(Photo: wsatlaw)

வெளிநாட்டு கட்டுமான ஊழியர் தன் மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கடுப்பில் 8 கார்களை அடித்து நாசம் செய்ததை தொடர்ந்து அவருக்கு 2 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சக ஊழியர்களாக தன் நண்பர்களுடன் சேர்ந்து அவர் மது அருந்திவிட்டு இந்த சம்பவத்தில் ஈடுப்பட்டதற்காக கூடுதலாக அவருக்கு S$2,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

வெளிநாட்டு ஊழியர்கள் சம்பளம் வேண்டி போராட்டம்: தன் சொந்த சேமிப்பில் சாப்பாடு, போக்குவரத்தை பார்த்து வந்த அவலம்

Nguyen Duc Thien என்ற அந்த ஊழியர், காக்கிட் புக்கிட்டில் நிறுத்தம் செய்யப்பட்டு இருந்த 8 கார்களை உலோக கம்பி, கையாளும் அடித்து நொறுக்கினார் என கூறப்பட்டுள்ளது.

8 கார்களின் சேத மதிப்பு S$23,000 வெள்ளி என்றும் சொல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி அரங்கேறியது.

அப்போது 5 நபர்கள் மட்டுமே போது இடங்களில் ஒன்றுகூட அனுமதி இருந்தது, அதனையும் அவர் மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் 6 மணிநேரம் வேலை பார்க்கும் ஊழியர்கள்… லாரியை ஓட்டும் முன் கட்டாய ஓய்வு