கட்டுமானத் திட்டங்களை டிஜிட்டல் முறையில் கையாள உதவும் புதிய ஒருங்கிணைந்த தளம்!

(Photo: TODAY)

கட்டட வடிவமைப்பாளர்கள், பொறியாளர்கள், ஒப்பந்தக்காரர்கள் தற்போது கட்டுமானத் திட்டங்களை டிஜிட்டல் முறையில் கையாள உதவும் ஒரு புதிய ஒருங்கிணைந்த தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது ​​1,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அதில் பதிவு செய்துள்ளன, மேலும் கூடுதலாக நிறுவனங்கள் பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார் மோதியதில் உணவு விநியோக ஓட்டுநர் உயிரிழப்பு – சாட்சிகளை தேடும் குடும்பம்!

அதில் சுமார் 15,000 பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தக்காரர்கள் உள்ளனர்.

The Hubble Platform என்னும் அந்த தளம், பிரச்சினைகளைக் கண்டறியவும், உரிய நேரத்தில் வேலை தளங்களை வடிவமைக்கவும், நிர்வகிக்கவும் மற்றும் கண்காணிக்கவும் அனுமதிக்கிறது.

இதனை உருவாக்க 18 மாதங்கள் ஆனது என்றும், இது காலப்போக்கில் புதிய அம்சங்களுடன் புதுப்பிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டுமானத் தளத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தேவையான பாதுகாப்பு தகவல்களை வழங்கி, நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்தவும் அது உதவுகிறது.

HDB குடியிருப்பின் ஜன்னல் விளிம்பில் காயங்களுடன் கிடந்த பெண்…!