வெளிநாட்டு ஊழியரை மோதி தூக்கிவீசிய லாரி… சாலையை கடக்க முயன்றபோது ஏற்பட்ட சோகம் (வீடியோ)

Construction worker hospitalised lorry
Photo: Singapore Road Accident on Facebook

பான்-தீவு விரைவுச் சாலையை கடக்க முயன்ற வெளிநாட்டு ஊழியர் மீது எதிரே வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் ஒரு வாரம் முன்னர் நடந்துள்ளது, சாலையைக் கடக்க முயன்றபோது 39 வயதான ஊழியரை லாரி மோதியுள்ளது.

சுற்றுலா பேருந்து கோர விபத்து: இருவர் மரணம் – மூன்று பேர் படுகாயம்.. 15 பேர் மருத்துவமனையில்

பின்னர், பாதிக்கப்பட்ட ஊழியர் சுயநினைவுடன் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) கூறியுள்ளது.

இந்த விபத்தின் காட்சிகள் “Singapore Road Accident” என்ற Facebook குழுவில் நேற்று ஜூலை 9 அன்று பகிரப்பட்டது.

ஏழு ஊழியர்கள் கொண்ட குழு, ஒளி பிரதிபலிப்பு ஆடைகள் மற்றும் ஹெல்மெட்களை அணிந்து வேலை செய்வதை வீடியோவில் காண முடிந்தது.

சாலைக்கு மற்றொரு பக்கமாக நின்றுகொண்டிருந்த ஊழியர் திடீரென சாலையை கடக்க முயன்றபோது எதிரே வந்த லாரி அவரை மோதி தூக்கி வீசியது.

ஜூலை 2, 2023 அன்று இரவு சுமார் 11:35 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

Eng Neo Avenue வெளியேறும் இடத்திற்கு அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஊழியர் வேலை செய்த கட்டுமான நிறுவனத்தின் பெயரை SCDF மற்றும் காவல்துறை வெளியிடவில்லை. மேலும் அவர் குறித்த விவரங்களும் வெளியாகவில்லை.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

Video: https://www.facebook.com/SingaporeRoadAccident/videos/

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

நிறுவனத்தின் அலட்சியம்… பறிபோன அப்பாவி ஊழியரின் உயிர் – MOM கடும் நடவடிக்கை