குறுகிய சாலையில் நுழைந்த கனரக லாரி கவிழ்ந்து விபத்து – ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதி

Photo: ST

பிடோக் ரிசர்வோர் வியூவில் உள்ள சிறிய வாகனங்களுக்கான குறுகிய சாலையில் நுழைந்த கனரக லாரி நேற்று (ஜனவரி 17) கவிழ்ந்தது.

இதில் 42 வயதான ஓட்டுநர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களின் FIN நம்பரை பயன்படுத்தி மோசடி… S$3,176 மதிப்புள்ள முகக்கவசங்களை பெற்றவருக்கு சிறை

அவர் லாரியை சிறிய சாலையில் இருந்து வெளியேற்ற முயன்றபோது, கவிழ்ந்து கீழே விழுந்தது, இதனால் லாரியின் கண்ணாடி சுக்குநூறாக உடைந்தது.

நேற்று மதியம் 12.27 மணியளவில் பிடோக் ரிசர்வோர் வியூவின் ஏற்பட்ட விபத்து குறித்து தகவல் கொடுக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் ஓட்டுநருக்கு பெரிய காயங்கள் ஏற்படவில்லை, ஆனால் அவரது முதுகில் காயம் மற்றும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிகிறது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியுள்ளது.

நீங்கள் எவ்வளவு தெளிவாக இருந்தாலும், இந்த வழியில் ஏமாற்றப்படலாம்… சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் உஷார்!