சிங்கப்பூரில் முன்னெப்போதும் இல்லாத அளவில் புதிய உச்சத்தில் கொரோனா பாதிப்பு!

Photo: Business Insider

சிங்கப்பூரில் கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ள சுகாதாரத்துறை அமைச்சகம், பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (26/09/2021) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், “நேற்று (26/09/2021) மதியம் நிலவரப்படி, சிங்கப்பூரில் புதிதாக 1,939 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து ஆறாவது நாளாக 1,000- ஐ தாண்டியுள்ளது. உள்ளூர் அளவில் 1,934 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 1,536 பேர் சமூக அளவில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 398 பேருக்கு நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த ஐந்து பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 417 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர்.

சிங்கப்பூரில் கோவிட்-19 தொற்று அதிகரித்து வருவதால், புதிய கட்டுபாடுகள்!

சிங்கப்பூரில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 87,892 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் மேலும் இரண்டு முதியவர்கள் உயிரிழந்தனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக, இம்மாதம் மட்டும் சுமார் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக, 1,203 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஆக்சிஜன் உதவியுடன் 172 பேர் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 30 பேர் கவலைக்கிடமான நிலையில் ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.” இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“அனைத்து வங்கிகளுக்கும் உடனடியாக பணம் அனுப்பும் சேவை”- இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முக்கிய அறிவிப்பு!

சிங்கப்பூரில் தினசரி கொரோனா பாதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. எனினும், சுகாதாரத்துறை அமைச்சகம் அமல்படுத்தியுள்ள கட்டுப்பாடுகளால் கொரோனா பரவல் வரும் நாட்களில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.