COVID-19: சிங்கப்பூர் மற்றும் மலேசியா இடையேயான பேருந்து சேவைகள் நிறுத்தம்..!

பொது போக்குவரத்து சேவைகளான, SMRT மற்றும் SBS டிரான்சிட் உள்ளிட்ட சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிற்கு இடையே இயங்கும் பல பேருந்து சேவைகள் இன்று புதன்கிழமை (மார்ச் 18) முதல் அடுத்த இரண்டு வாரங்களுக்கு மலேசியாவுக்கு இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியா இன்று (மார்ச் 18) முதல் அடுத்த இரண்டு வாரங்களுக்கு முடக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : மலேசியர்கள் வெளிநாடு செல்லத் தடை; கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மூடல்..!

பேருந்து சேவைகள் ‘160 மற்றும் 170’ ஆகியவை மார்ச் 18 முதல் 31 வரை ஜோகூர் பாருவுக்கு செல்வது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்று SBS (மார்ச் 17) தெரிவித்துள்ளது.

ஆனால், சிங்கப்பூரில் அதற்கான பாதையில் அவைகள் தொடர்ந்து இயங்கும்.

இதில் சேவை 170, உட்லேண்ட்ஸ் ரயில் சோதனைச் சாவடியில் திரும்பும் என்றும், அதே நேரத்தில் சேவை 160 மார்சிலிங் பூங்காவிற்கு முன்னால் உள்ள பேருந்து நிறுத்தத்தில் திரும்பும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிரான்ஜி MRT நிலையத்திற்கும் ஜோகூர் பாருவுக்கும் இடையே இயங்கும், 170X சேவை இந்த தடை காலகட்டத்தில் நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், SMRT பஸ் சேவை 950 , மார்ச் 31 வரை நிறுத்தப்படும்.

Source : Straits Times

இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஒரேநாளில் புதிதாக 23 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!