“கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு லேசான பாதிப்பு”- அமைச்சர் சான் சுன் சிங் தகவல்!

Photo: gov.sg

 

கொரோனா சூழலுக்கு மத்தியிலும் சிங்கப்பூர் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்றைய (02/08/2021) கூட்டத்தின் போது, 12 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து செங்காங் ஜி.ஆர்.சி. தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹி டிங் ரு (He Ting Ru- Sengkang ‘GRC’) கேள்வி எழுப்பினர்.

உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்து பேசிய கல்வித்துறை அமைச்சர் சான் சுன் சிங் (Education Minister Chan Chun Sing), “சிங்கப்பூரில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு லேசான தொற்று மட்டுமே இருந்தது; தீவிர சிகிச்சை அல்லது ஆக்ஸிஜன் உதவி யாருக்கும் தேவையில்லை. கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியைப் பொறுத்தவரை, 12 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான தடுப்பூசிப் போடும் முன்னோட்டச் சோதனைகள் கொரோனா தடுப்பூசிக்கான நிபுணர் குழு கண்காணித்து வருகிறது. அது தயாராக இருக்கும் போது பரிந்துரைகளை வெளியிடும்.

ரயில் தண்டவாளத்தில் தீடீரென ஏறி நடந்த பெண்ணால் பரபரப்பு – 25 நிமிடம் சேவை நிறுத்தம்!

குழந்தைகளைப் பாதுகாப்பாக வைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நாடாளுமன்றத்தில் கோடிட்டுக் காட்டிய அமைச்சர், கொரோனா தொற்று வாழப் பழகுவதை நோக்கிச் செல்லும் வகையில், பள்ளிகள் அவற்றின் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேம்படுத்தும்.

மற்ற நாடுகளில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் வயதானவர்கள் மற்றும் முதியவர்களைக் காட்டிலும் சிறுவர்களுக்கு நோய் விளைவு குறைவானது என்பதைக் காட்டுகிறது. சிங்கப்பூரில் டெல்டா வகை வைரஸால் பாதிக்கப்பட்ட 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கூட லேசான பாதிப்பு மட்டுமே இருந்தது.” இவ்வாறு அமைச்சர் கூறினார்.