ரயில் தண்டவாளத்தில் தீடீரென ஏறி நடந்த பெண்ணால் பரபரப்பு – 25 நிமிடம் சேவை நிறுத்தம்!

Commuter climbed onto tracks
Pic: File/Today

சிங்கப்பூரில் உள்ள Yio Chu Kang ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் தீடீரென தளமேடைக் கதவுகளில் ஏறி, ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் Ang Mo Kio – Yishun ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவை 25 நிமிடங்களுக்குத் தடைபட்டது.

Yio Chu Kang ரயில் நிலையத்தில் இருந்து நேற்று (ஆகஸ்ட் 02) மதியம் 1:55 மணி அளவில், உதவி கேட்டு அழைப்பு வந்ததாகக் காவல்துறை கூறியுள்ளது.

இதையடுத்து, ரயில் தண்டவாளத்தில் நடந்த அந்தப் பெண், பாதுகாப்பாக மீட்கப்பட்டு மனநலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோத அத்துமீறலுக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு..பகலில் கொளுத்த போகும் வெயில்.!

தளமேடையில் இருந்த பயணிகள் உடனடியாக Emergency Stop Plunger என்னும் அவசரமாக நிறுத்தும் சேவையை செயல்படுத்தியதாகவும் அதனால், ரயில் தடங்களில் உள்ள மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது என்றும் காவல்துறை விளக்கமளித்தது.

அந்தப் பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை என சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை (SCDF) கூறியது. ரயில் தண்டவாளத்தில் நடந்த அந்தப் பெண்ணுக்குக் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என SMRT அதன் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது‌.

ரயில் சேவை தடைபட்டபோது, Ang Mo Kio – Yishun ரயில் நிலையங்களுக்கு இடையே இலவச பேருந்து சேவைகள் வழங்கப்பட்டது. ரயில் சேவை மதியம் சுமார் 2.20 மணிக்கு மீண்டும் செயல்பட்டது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தவறான கல்வித்தகுதிகளை சமர்ப்பித்த “Work Pass” வைத்திருக்கும் 11 பேர் பிடிபட்டனர்!