இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு..பகலில் கொளுத்த போகும் வெயில்.!

Singapore weather report
Pics: Zheng Zhangxin & File/Today

சிங்கப்பூரில் ஜூலை மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களுடன் ஒப்பிடும்போது, ஆகஸ்ட் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்கு இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வு மையம் (MSS) தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் முதல் இரண்டு வாரங்களில் பெரும்பாலான நாட்களில் சிங்கப்பூரின் சில பகுதிகளில் காலை மற்றும் பிற்பகல் இடையே இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுவதாக MSS கூறியுள்ளது.

சிங்கப்பூரில் கிருமித்தொற்று காரணமாக 34 வயது ஆடவர் மரணம்!

நிலப்பகுதிகளில் பகல்நேர வெப்பம் அதிகமாக இருப்பதால், சில நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளில், ஆகஸ்ட் மாதம் முதல் இரண்டு வாரங்களில் மழையின் அளவு சராசரியை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் மாதத்தில் மழை பெய்யத் தொடங்கும் என்பதால் அதே வேளையில், தினசரி வெப்பநிலை அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினசரி வெப்பநிலை பகல் நேரத்தில், 24 டிகிரி செல்சியஸ் முதல் 33 டிகிரி வரை செல்சியஸ் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் கிழக்கு மற்றும் தெற்கு கடலோரப் பகுதிகளில், இரவில் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

உதவி செய்ய வயது ஒரு தடையே இல்லை – வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவிய சிறுவர்கள்!