சிங்கப்பூரில் கிருமித்தொற்று காரணமாக 34 வயது ஆடவர் மரணம்!

Ukrainian man died covid
Pic: Raj Nadarajan/TODAY

கொரோனா கிருமித்தொற்று காரணமாக 34 வயது உக்ரேனியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 01) தெரிவித்துள்ளது. கப்பல் சிப்பந்தியான (sea crew) அவர் கடந்த மாதம் 29ம் தேதி சிங்கப்பூருக்கு வந்துள்ளார்,

கிருமித்தொற்று காரணமாக மரணமடைந்த அந்த 34 வயது ஆடவர், ஆகஸ்ட் 1ம் தேதி சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், அதே நாளில், அவருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

போலி கல்வி தகுதி சான்றிதழ் சமர்ப்பித்த 11 வெளிநாட்டினருக்கு சிங்கப்பூரில் பணியாற்ற நிரந்தர தடை!

கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை அவர் போட்டுக்கொள்ளவில்லை என்றும், அவருக்கு கடந்த மாதம் ஜூலை 25ம் தேதி காய்ச்சல், இருமல், உடல்சேர்வு இருந்ததாகவும், ஜூலை 31ம் தேதி மூச்சுவிட சிரமப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் COVID-19 கிருமித்தொற்று காரணமாக ஏற்பட்ட இறப்புகளின் மொத்த எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது. சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் உயிரிழந்த ஆக குறைந்த வயதுடையவர் அந்த உக்ரேனியர் ஆவார்.

போனஸ், படிப்படியான ஊதியம் வழங்க தவறிய 57 நிறுவனங்களுக்கு அபராதம்