போனஸ், படிப்படியான ஊதியம் வழங்க தவறிய 57 நிறுவனங்களுக்கு அபராதம்

Pic: Ili Nadhirah Mansor/TODAY

சிங்கப்பூரில், 57 உரிமம் பெற்ற துப்புரவு நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

படிப்படியான ஊதிய உயர்வின்கீழ், அந்நிறுவனங்கள் துப்புரவுத் துறைக்கான தேவைகளை பூர்த்தி செய்யத் தவறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் புதிய தொற்று குழுமம்

அதாவது, போனஸ், படிப்படியான ஊதியம் ஆகியவற்றை அந்த துப்புரவு நிறுவனங்கள் செலுத்த தவறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோன்ற மீறல் தொடர்பாக மேலும் 52 நிறுவனங்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் வழங்கப்பட்டதாகவும் நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் ஃபூ இன்று (ஆகஸ்ட் 2) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த மீறல்கள் 2014ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் இடையில் ஏழு ஆண்டுகளில் நடந்துள்ளது.

2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மறுஆய்வு, துப்புரவுத் ஊழியர்கள் 2020 முதல் 2022 வரை 3 சதவீத வருடாந்திர சம்பள உயர்வை பெற வழிவகுத்தது.

மேலும், கடந்த ஆண்டிலிருந்து குறைந்தபட்சம் இரண்டு வார அடிப்படை மாத ஊதியத்தை கட்டாய போனஸ்-ஆக வழங்கவும் அது வழிவகுத்தது.

உதவி செய்ய வயது ஒரு தடையே இல்லை – வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவிய சிறுவர்கள்!