கொரோனா நோய்த்தொற்றால் 0.6% குழந்தைகள் மட்டுமே பாதிப்பு!

COVID-19: Schools to conduct home-based learning once a week from April

 

சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து பகுதிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அமைச்சகம் முடுக்கிவிட்டுள்ளது. அதேபோல், கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகளும் தொய்வின்றி நடைபெற்று வருகிறது.

ஆகஸ்ட்டில் எண்ணெய் அல்லாத உள்நாட்டு ஏற்றுமதியில் மெதுவான வளர்ச்சி!

கொரோனா தடுப்பூசியை முழுமையாக, அதாவது தடுப்பூசியின் இரண்டு டோஸையும் போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 88% கடந்துள்ளது. சிங்கப்பூர் வாசிகளுக்கு மட்டுமின்றி வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொய்வின்றி நடைபெற்று வருகிறது. எனினும், பொதுமக்கள், தொழிலாளர்கள், தொழில் நிறுவனங்கள், உணவகங்கள் முறையாக அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்ட பின்பும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு, முறையான உணவுகள், மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பின்பற்றிக் குணமடையும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கொரோனா தடுப்பூசிப் போட்டுக் கொள்ளாத 72 வயது மூதாட்டி கொரோனாவால் உயிரிழப்பு!

இந்த நிலையில், சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 0.6% மட்டுமே குழந்தைகள் ஆவர். கொரோனாவால் குழந்தைகளுக்கு லேசானது முதல் மிதமான பாதிப்பே ஏற்பட்டது; குழந்தைகள் யாரும் கடுமையாகப் பாதிக்கப்படவில்லை. டென்மார்க்கில் சிங்கப்பூரைப் போன்று மக்கள் தொகை ஒரே அளவில் உள்ளது. தடுப்பூசி போட்டோரின் விகிதமும் அதிகம்” என்று குறிப்பிட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் 18 வயது முதல் 60 வயதுக்கு மேற்பட்டோரைத் தாக்கினாலும், சிறுவர்கள், சிறுமிகள் குறைவான மிக மிக குறைவான அளவே பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, கொரோனாவால் எந்த குழந்தைகளுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படவில்லை என்பது அனைவருக்கும் ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது.

செப்டம்பர் மாதம் இரண்டாம் பாதியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

கொரோனாவை இவ்வுலகில் இருந்து விரட்ட அரசு, தன்னார்வலர்கள், மருத்துவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாததாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.