கொரோனா தடுப்பூசிப் போட்டுக் கொள்ளாத 72 வயது மூதாட்டி கொரோனாவால் உயிரிழப்பு!

Photo: Today

சிங்கப்பூரைச் சேர்ந்த 72 வயது மூதாட்டி ஒருவருக்கு செப்டம்பர் 4- ஆம் தேதி அன்று கொரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டன. அதைத் தொடர்ந்து, அவருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவு செப்டம்பர் 6- ஆம் தேதி அன்று வெளியானது. அதில் மூதாட்டிக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிச் செய்யப்பட்டது.

Booster டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டார் பிரதமர் திரு லீ.!

இதையடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனால் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் கூறுகையில், “மூதாட்டிக்கு உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிகமான கொழுப்பு அளவு, நெஞ்சு வலி போன்ற இணையநோய்கள் இருந்தன. மேலும், கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸைக் கூட அவர் போட்டுக் கொள்ளவில்லை” எனத் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (16/09/2021) வெளியிட்டிருந்த அறிவிப்பில், “புதிதாக 906 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதில் 244 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்” என்று குறிப்பிட்டுள்ளது.

விடுதியில் அடைப்பட்டிருந்தோருக்கு விடுதலை! – வெளியே சென்ற தமிழக ஊழியர்கள் 100 பேர் பெரும் மகிழ்ச்சி

சிங்கப்பூரில் தொடர்ச்சியாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அமைச்சகம் மேற்கொண்டு வரும் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.