கொரோனா தொற்று பரவல் சூழலில் மதுக்கூடத்தை மூடத் தவறியதாக உரிமையாளர் மீது குற்றச்சாட்டு!

Photo: Singapore Tourism Board

 

சிங்கப்பூரில் வசித்து வருபவர் கெல்வின் ஜான் ஓய் காம் லோக் (Kelvin John Ooi Kam Loke). 46 வயதான இவர், அவுட்ராம் சாலையில் (Outram Road) உள்ள கான்கார்ட் ஷாப்பிங் சென்டரில் (Concorde Shopping Centre) 72 மேட் மாங்க் பார் (72 Mad Monk Bar) என்ற மதுக்கூடத்தை நடத்தி வருகிறார்.

 

அரசு அறிவித்த கொரோனா கட்டுப்பாடுகளின் படி, மதுக்கூடங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கடந்த ஆண்டு ஆகஸ்ட், நவம்பர் ஆகிய இரு மாதங்களில், கெல்வின் தனது மதுக்கூடத்தை மூடாமல் தொடர்ந்து திறக்கப்பட்டிருந்ததாகவும், அங்கு வாடிக்கையாளர்கள் அமர்ந்து மது அருந்தியதாகவும் கூறப்படுகிறது.

 

சமூக அளவில் அதிகரிக்கும் கிருமித்தொற்று: பள்ளிகள் கூடுதல் கட்டுப்பாடுகள்.!

 

அதன் தொடர்ச்சியாக, கடந்த ஆண்டு அக்டோபர் 18- ஆம் தேதி அன்று சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் (Singapore Tourism Board- ‘STB’) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், “அக்டோபர் 9- ஆம் தேதி அன்று இரவு 11.45 PM மணிக்கு கெல்வினின் வாடிக்கையாளர்கள் இருந்ததைப் புகைப்படங்களுடன் வெளியிட்டது. மதுக்கூடத்துக்கு உணவுக் கடைக்கான உரிமம் இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21- ஆம் தேதி அன்று அதிகாலை 12.05 AM மணிக்கு தனது மதுக்கூடத்தை மூடப்பட்டிருப்பதை உறுதி செய்யத் தவறியதாக கெல்வின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதேபோன்று கடந்த ஆண்டு நவம்பர் 8- ஆம் தேதி அன்று இரவு 10.33 PM மணியளவில் மக்களை மீண்டும் மதுக்கூடத்தில் அனுமதித்ததாக கெல்வின் மீது குற்றம் சாட்டப்பட்டது.

 

இந்த இரு குற்றசாட்டுகள் காரணமாக கெல்வின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நேற்று (19/07/2021) விசாரணைக்கு வந்தபோது, கெல்வின் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இவ்வழக்கு அடுத்த மாதம் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

 

குற்றம் நிரூபிக்கப்பட்டால், கெல்வினுக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் (அல்லது) சுமார் 10,000 சிங்கப்பூர் டாலர் வரை அபராதம் விதிக்கப்படலாம் (அல்லது) சிறைத்தண்டனை மற்றும் அபராதம் ஆகிய இரண்டும் விதிக்கப்படலாம்.