சமூக அளவில் அதிகரிக்கும் கிருமித்தொற்று: பள்ளிகள் கூடுதல் கட்டுப்பாடுகள்.!

Singapore tight covid measures
Pic: File/Reuters

சிங்கப்பூரில் சமூக அளவில் கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, பள்ளிகள் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

பள்ளி மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் நலனைப் பாதுகாக்க தற்போது எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஒரு பகுதி என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பள்ளிகளில் நேற்று (ஜூலை 19) முதல் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
உடற்பயிற்சி பாடம், வகுப்பு அடிப்படையில் நடைபெறுவதோடு, குழு நடவடிக்கைகளில் இருவர் மட்டுமே ஈடுபட முடியும்.

இந்த ஊழியர்களுக்கு படிப்படியான சம்பள உயர்வு

விளையாட்டு மற்றும் நடன வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை 50-ல் இருந்து 30 ஆகவும், குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 5-ல் இருந்து 2 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், சிங்கப்பூரில் தொடக்கப் பள்ளிகளுக்கான நேரடி வகுப்புகள் அடுத்த வாரம் முதல் தொடங்க கல்வி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

மில்லெனியா கல்வி நிலையம், தொடக்கக் கல்லூரிகள், உயர்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றுக்கான நேரடி இணைப்பாட நடவடிக்கைகள் வழக்கம்போல் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்கான இந்தியாவின் ஏற்றுமதி 24% உயர்வு!