இந்த ஊழியர்களுக்கு படிப்படியான சம்பள உயர்வு

(photo: SMDN)

மின்தூக்கி பழுதுபார்க்கும் ஊழியர்களுடன் அடுத்த ஆண்டிலிருந்து உள்ளூர் மின்படிக்கட்டு பழுது பார்க்கும் ஊழியர்களுக்கும் படிப்படியான சம்பள உயர்வு முறையில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

மின்படிக்கட்டு பழுதுபார்க்கும் ஊழியர்களும் படிப்படியான சம்பள உயர்வு முறையில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று முத்தரப்பு குழு சமர்ப்பித்த பரிந்துரையை அரசாங்கம் நேற்று ஏற்றுக்கொண்டது.

இதன்படி, ஊழியர்களுக்கு 2023 ஜனவரியில் இருந்து மாத சம்பள அளவில் வருடாந்திர போனஸ் வழங்கப்படும்.

சிங்கப்பூருக்கான இந்தியாவின் ஏற்றுமதி 24% உயர்வு!

அடிப்படை சம்பளத்துடன் மிகுதிநேரம் மற்றும் இதர சம்பள கூறுகளையும் சேர்த்தால் அவர்கள் மாதம் $2,700 சம்பளம் பெறுவார்கள்.

இந்த மாற்றங்களால் அந்த தொழில்துறையில் தொழில்நுட்ப ஊழியர்களாக உள்ள சுமார் 1,300 சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள் பயனடைவார்கள். இந்த துறையில் 3,050 தொழில்நுட்பர்கள் பணியாற்றுகிறார்கள், அவர்களில் 1,750 வெளிநாட்டு ஊழியர்கள் உள்ளனர்.

ஜுரோங் ஈஸ்ட்டில் உள்ள ஜேடிசி சிமெண்ட் கட்டடத்துக்கு, என்டியுசியின் தலைமை செயலாளர் திரு இங் சீ மெங்குடன் வருகை புரிந்த மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகமது, படிப்படியாக சம்பள உயர்வு முறை, பலதுறை தொழிற்கல்லூரிகள், தொழில்நுட்ப கல்விக் கழகம் ஆகியவற்றின் பட்டதாரிகள் இந்த தொழில் துறையில் சேர ஊக்குவிக்கப்படுவார்கள் என நம்புவதாக தெரிவித்தார்.

மேலும், சில ஆண்டுகளில் இந்த தொழில்துறையின் அடிப்படை சம்பள முறையில் குறிப்பிடத்தக்க உயர்வை காணலாம் என்றும் அவர் கூறினார்.

ஜூரோங் ரயில் பாதையில் நீல நிற ரயில்கள்!