இந்து கோயில்களில் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள்!

File Photo

 

சிங்கப்பூரின் இந்து அறக்கட்டளை வாரியம் நேற்று (20/07/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜூலை 20- ஆம் தேதி அன்று, கொரோனாவுக்கு எதிரான அமைச்சகங்கள் நிலை பணிக்குழு, சமூக அளவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கடும் நடவடிக்கைகளை அறிவித்தது. இந்த புதிய விதிமுறைகள் வரும் ஜூலை 22- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 18- ஆம் தேதி வரை கொரோனா கிருமி பரவலைச் சமூகத்தில் மேலும் பரவாமல் இருக்க அமல்படுத்தப்படும்.

இந்து கோயில்களில் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் பன்வருமாறு:

1.கோயில்களில் எந்த நேரத்திலும் அதிகபட்சம் 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். நிகழ்வுக்கு முந்தைய சோதனை (PET) தேவையில்லை.

2. பக்தர்கள் இரண்டு பேருக்கு மிகாமல் குழுவாகப் பங்கேற்கலாம். குழுக்களுக்கு இடையே 1 மீட்டர் பாதுகாப்பான தூரம் இருக்க வேண்டும்.

3. பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளை விரைவாக முடித்து வெளியேறி மற்ற பக்தர்கள் கோயிலுக்குள் வர ஒத்துழைக்க வேண்டுகிறோம்.

4. முதியவர்கள், நாள்பட்ட அல்லது உள்ளார்ந்த நிலைமைகள் உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் தங்கள் நலனுக்காக வீட்டிலிருந்து வழிபடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சூரிய சக்தியில் இயங்கும் ஈ.வி. சார்ஜிங் மையத்தைத் திறந்த செம்ப்கார்ப் இண்டஸ்ட்ரீஸ்!

5. 50- க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் (அதிகபட்சமாக 100 பங்கேற்பாளர்கள் மட்டும்) உள்ள திருமணங்களுக்கு, அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் ‘PET’ தேவைப்படும் (அல்லது) அவர்களுக்கு திருமண தேதிக்கு குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்பாக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். ‘PET’ பற்றிய கூடுதல் தகவலுக்கு https://www.moh.gov.sg/covid-19/pet என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்துக் கொள்ளலாம்.

6. வழிபாட்டு நடவடிக்கைகளில் நேரடிப்பாடல், இசைக்கு அனுமதி இல்லை.

7. கோயிலில் பூஜைகள் அல்லாத மற்ற நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்படும்.

8. ‘Trace Together’ என்ற செயலி (அல்லது) என்ற ‘Trace Together’ (Token) சாதனத்தைப் பயன்படுத்தி மட்டுமே கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படும். இவ்வாறு இந்து அறக்கட்டளை வாரியம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.