வெளியானது கொரோனா பரிசோதனை முடிவுகள்- ஆங் மோ கியோ அவென்யூ, கிளமெண்டி வட்டாரங்களில் எத்தனைப் பேருக்கு பாதிப்பு?

PHOTO: Google Maps

 

சிங்கப்பூரில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்து பகுதிகளிலும் சுகாதாரத்துறை அமைச்சகம் முடுக்கிவிட்டுள்ளது. அதேபோல், கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மேலும், கொரோனா பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தாங்கள் சுயமாகவே கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உதவும் கருவிகளை ஒவ்வொரு வீடுகளுக்கும் அரசு விநியோகித்து வருகிறது. அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவருக்கு கொரோனா உறுதிச் செய்யப்பட்டாலும், குடியிருப்பில் உள்ள அனைவருக்கும் சுகாதாரத் துறையை மருத்துவ குழுவினர், அந்த குடியிருப்பு சென்று பொதுமக்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றன.

லாரிகளில் போதிய வசதி இல்லாமல் ஊழியர்களை ஏற்றிச் சென்ற 23 குற்றவாளிகள் பிடிபட்டனர்

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆங் மோ கியோ அவென்யூ 10, வேஸ்ட் கோஸ்ட் டிரைவ் உள்ளிட்ட இடங்களில் உள்ள குடியிருப்புகளில் பொதுமக்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், பரிசோதனை முடிவுகளை சுகாதாரத்துறை நேற்று (02/08/2021) வெளியிட்டிருந்தது.

அதன்படி, அங் மோ கியோ அவென்யூ 10-ல் உள்ள பிளோக் 556 -ல் குடியிருப்பாளர்களுக்கு நடத்தப்பட்ட கட்டாயப் பரிசோதனையில் 11 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த பிளோக்கில் வசிக்கும் 532 குடியிருப்பாளர்களுக்கு நேற்று முன்தினம் (01/08/2021) கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 520 பேருக்கு நோய்த்தொற்று இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவரின் பரிசோதனை முடிவு மட்டும் இன்னும் வெளியாகவில்லை.

எஸ்பிஹெச் நிறுவனத்தை வாங்க முன் வந்தது கெப்பல் குழுமம்!

அதேபோல், 445A கிளமெண்டி அவென்யூவில் 4 (Clementi Avenue 4) 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 438 ஆங் மோ கியோ அவென்யூ 10-ல் ((Ang Mo Kio Avenue 10) உள்ள குடியிருப்பில் 2 பேருக்கும், 3 தெக் வாய் லேனில் (Teck Whye Lane) 4 பேருக்கும், 510 வெஸ்ட் கோஸ்ட் டிரைவில் (West Coast Drive) 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எனினும், 357 யுங் ஆன் சாலையில் உள்ள குடியிருப்பில் (Yung An Road) யாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (03/08/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.